மேலும் செய்திகள்
சுற்றுசுவர் வசதி இல்லாத உள்ளாவூர் அரசு பள்ளி
12-Dec-2024
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் புகுந்த தெரு நாய் எல்.கே.ஜி., மாணவியை கடித்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மதுரை- ராமநாதபுரம் ரோடு சரஸ்வதி நகர் பகுதியில் யாதவா மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகள் ஜெய்ஸ்வினி 4, எல்.கே.ஜி., படிக்கிறார். நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு மாணவி தனியாக சென்றுள்ளார். அப்போது தெரு நாய் பள்ளி வளாகத்தில் திரிந்தது. இதனைப் பார்த்து பயந்த சிறுமி ஓடிய நிலையில் தடுக்கி விழுந்த போது முகத்தில் நாய் கடித்துள்ளது. உடனடியாக மாணவி மீட்கப்பட்டு பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நாய் புகுந்து கடித்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நாய்களை கட்டுப்படுத்த துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
12-Dec-2024