உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் ராமகிருஷ்ணன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பள்ளியில் பாராட்டு விழா தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ராமகிருஷ்ணனுக்கு சக ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பள்ளியில் ஆசிரியரின் பங்களிப்பு குறித்து பேசினர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், தி.மு.க, நகரச் செயலாளர் கண்ணன், வார்டு கவுன்சிலர் வைரவன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், அமீன், ஆசிரியர்கள் இஸ்மாயில், சதக்க அப்துல்லா, ராபர்ட், ஸ்டீபன், சதீஷ்குமார், ஜலிலா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை