நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளர் சஸ்பெண்ட்
சிக்கல்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 8300 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட நிலை அலுவலர்களால் திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே உள்ள தடுத்தலான்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும் சிக்கல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் மீது விசாரணை நடக்கிறது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மெல்வின் டார்லிங் தெரிவித்தார்.