உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் விழுந்த மீனவர் பலி

கடலில் விழுந்த மீனவர் பலி

தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சங்கர் 38, சிங்கார செல்வம் 55. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சங்கர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி இறந்தார்.மற்ற மீனவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். தொண்டி மரைன் எஸ்.ஐ., கதிரவன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !