அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத நிர்வாகம்
சிக்கல்: சிக்கல் ஊராட்சி தொட்டியபட்டி அங்கன்வாடி மையம் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அங்கன்வாடி மைய கட்டட வளாகப் பகுதியில் குப்பை கொட்டுகின்றனர்.குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதே போல் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் ரோட்டோரம் கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.துர்நாற்றத்தால் குழந்தைகளும், மையப் பொறுப்பாளர்களும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஒன்றரை வயது முதல் 5 வயது குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் கருதி இப்பகுதியில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். கடலாடி யூனியன் அதிகாரிகள் குப்பை கொட்டும் இடத்தை மாற்றவம், உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.