உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செவல்பட்டியில் துணை சுகாதார நிலையம் தேவை கிராம மக்கள் அவதி

செவல்பட்டியில் துணை சுகாதார நிலையம் தேவை கிராம மக்கள் அவதி

சாயல்குடி : சாயல்குடியில் இருந்து 15 கி.மீ.,ல் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியாக செவல்பட்டி ஊராட்சி உள்ளது.இங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.இங்கு துணை சுகாதார நிலையம் இல்லாததால் 15 கி.மீ.,ல் உள்ள சாயல்குடிக்கும், 8 கி.மீ.,ல் உள்ள உச்சிநத்தம் கிராமத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. இங்கு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.காய்ச்சல், தலைவலி, விஷக்கடி, கர்ப்பிணிகள் பரிசோதனை, வளரிளம் பெண்களுக்கான சத்து மாத்திரை உள்ளிட்ட மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வழி இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். செவல்பட்டி ஊராட்சி தலைவர் சொரிமுத்து கூறியதாவது:துணை சுகாதார நிலையம் வேண்டி பலமுறை யூனியன் அலுவலகத்திற்கும் மருத்துவத்துறையினருக்கும் மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவ வசதி பெறுவதில் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.இங்கிருந்து 8 கி.மீ.,ல் உள்ள உச்சிநத்தத்திற்கு செல்வதற்கு கூட பஸ் வசதி இல்லை. அவசர தேவைக்கான மருத்துவ சிகிச்சை இல்லாததால் சாயல்குடிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய துணை சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை