கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கேணிக்கரை எஸ்.ஐ., தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குயவன்குடி பகுதியில் சமையன்வலசை சுடுகாடு அருகே பனங்காட்டுப் பகுதியில் டூவீலருடன் 3 வாலிபர்கள் நின்றிருந்தனர். போலீசாரை கண்டவுடன் ஓட ஆரம்பித்தனர். அவர்களை பிடித்த போலீசார் விசாரித்த போது டூவீலரில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த உச்சிப்புளி அருகே துத்திவலசை முருகநாதபுரம் மாரிமுத்து மகன் கவியரசன் 26, ராமநாதபுரம் அருகே நாகநாதபுரம் புதுத் தெரு பாண்டி மகன் ரித்தீஷ் 20, சண்முகநாதன் மகன் சூரியநாராயணன் 22, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.