/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை வேளாண் இயந்திரங்கள் கருவி பராமரிப்பு சிறப்பு முகாம்; விவசாயிகளுக்கு இலவசம்
நாளை வேளாண் இயந்திரங்கள் கருவி பராமரிப்பு சிறப்பு முகாம்; விவசாயிகளுக்கு இலவசம்
ராமநாதபுரம் : பரமக்குடியில் நாளை (ஆக.31) இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு, பராமரிப்பு குறித்த சிறப்பு முகாம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து நாளை (ஆக.31) பரமக்குடி ராஜா சேதுபதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்ட அளவிலான முகாம் நடக்கிறது.அனைத்து விவசாயிகள், டிராக்டர் இயக்குபவர்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்லாம்.விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டர் மற்றும் உபகரணங்களை இம்முகாமிற்கு கொண்டுவந்து இலவசமாக (வேலைகூலி மட்டும்) பராமரிப்பு செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.