உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் நடந்த உறியடி உற்ஸவம்

பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் நடந்த உறியடி உற்ஸவம்

பரமக்குடி : பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்ஸவம் நடந்தது.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பெருமாள் உறி அடிக்கும் கண்ணன் திருக்கோலத்தில் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார்.இரவு 8:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி பெருமாள் கோயில் முன்பு காளிதாஸ் பள்ளிக்கூடம் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உறிகளில் கட்டப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணர் வேடமிட்டவர் பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவற்றை பானைகளில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். தொடர்ந்து ரத வீதிகளின் சுற்றி வந்த பெருமாள் இரவு 11:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர். * எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்ஸவ விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் கிருஷ்ணனாக அலங்காரமாகினார்.முக்கிய வீதிகளில் உறியடிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி