உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை : திருவாடானை தாலுகா ஆழிகுடி குரூப் கிராம உதவியாளர் சுதாகர் 47. இவர் சில நாட்களுக்கு முன்பு தொண்டி அருகே வீரசங்கிலிமடம் அருகில் டூவீரில் சென்ற போது சின்னதொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.சுதாகரை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி திருவாடானை, ஆர் எஸ் மங்கலம் தாலுகாவை சேர்ந்த கிராம உதவியாளர்கள் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். 80க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை