அழகன்குளத்தில் மதுக்கடையை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: மநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார் வலசையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என ஹிந்து முஸ்லிம் ஜக்கிய பரிபாலன சபை மற்றும் மகளிர் மன்றத்தினர் வலியுறுத்தினர்.அழகன்குளம் ஹிந்து முஸ்லிம் ஜக்கிய பரிபாலன சபை மற்றும் மகளிர் மன்றத்தினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஊரின் நுழைவுப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. இதன் அருகே பள்ளிகள், கோயில், நிறைய குடியிருப்புகள் உள்ளன. மதுக்கடையை கடந்து செல்லும் போது போதை ஆசாமிகளால் பெண்கள், மாணவிகள் அச்சப்படுகின்றனர். இக்கடையை அகற்ற 10 ஆண்டுகளாக அமைதியாக போராடி வருகிறோம்.எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.