காட்டு வேளாங்கண்ணியில் அடிப்படை வசதியின்றி அவதி
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் காட்டு வேளாங்கண்ணி குடியிருப்பில் ரோடு, குடிநீர், கழிப்பறை வசதியின்றி பழங்குடியின மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.காட்டு வேளாங்கண்ணி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், பழங்குடியின மக்களாகிய நாங்கள் 30 ஆண்டுகளாக காட்டு வேளாங்கண்ணியில் வசிக்கிறோம். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், ரோடு வசதி இல்லை. மண் ரோட்டில் வாகனங்களில் மட்டுமின்றி நடந்து செல்லவும் சிரமப்படுகிறோம். தங்கச்சி மடம் ஊராட்சி நிர்வாகத்தில் கூறியும் நடவடிக்கை இல்லை.எனவே அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.