உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடு அறுக்கும் தொட்டி கட்டப்படுமா

ஆடு அறுக்கும் தொட்டி கட்டப்படுமா

முதுகுளத்துார்: துகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிதாக ஆடு அடிக்கும் தொட்டி கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை கடை வளாகத்தில் பேரூராட்சி சார்பில் 2013ம் ஆண்டு ரூ. 20 லட்சத்தில் ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது.பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைக்காரர் பராமரித்து வந்தனர்.முறையாக பராமரிக்கப்படாதால் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலைக்கு மாறியது. அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சேதமடைந்த ஆடு அடிக்கும் கட்டடத்தை இடித்து அகற்றினர்.தற்போது முதுகுளத்துார் பெரிய கண்மாய் அருகே தற்காலிகமாக செட் அமைத்து வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.அங்கு போதுமான வசதி இல்லாததால் தினந்தோறும் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துாரில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் செயல்படுகிறது. வியாபாரிகளின் நலன் கருதி புதிதாக ஆடு அடிக்கும் தொட்டி கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை