உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பல்லவனுக்கு இணைப்பு ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு 

பல்லவனுக்கு இணைப்பு ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு 

ராமநாதபுரம்: பல்லவன் ரயிலுக்கு இணைப்பாக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட இயக்கப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.ராமநாதபுரத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இரவு 10:00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் காலை 5:00மணிக்கு திருச்சி செல்லும்.அங்கு காலை 6:30 மணிக்கு பல்லவன்ரயில் சென்னைக்கு இயக்கப்பட்டதால் அந்த ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து பயணம் செய்பவர்கள் சென்னைக்கு பயணித்தால் மதியம் 12:10 மணிக்கு சென்னை சென்றடையலாம்.அதேபோல் காலை 7:00மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு9:00 மணிக்கு சென்றடையும். சென்னையிலிருந்து வரும்பல்லவன் ரயிலில் வரும் ராமேஸ்வரம் பயணிகள் திருச்சியிலிருந்துஇரவு 9:30 க்கு புறப்படும் ரயிலில் புறப்பட்டால் அதிகாலை 12:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டது.சென்னை செல்லும் பல்லவன் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. அகலப்பாதை ஆகிய பின் பல்லவன் ரயிலுக்கு ராமேஸ்வரத்திலிருந்து இணைப்பு ரயில் இயக்கப்படவில்லை. எனவே ராமேஸ்வரத்தில் இருந்து பல்லவனுக்கு இணைப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை