பாலுாட்டும் அறையின்றி தவிக்கும் பெண்கள்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை இல்லாததால் பெண்கள் தவிக்கின்றனர்.ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்தவற்காக ஏராளமான தாய்மார்கள் தினந்தோறும் மருத்துவமனைக்கு வருகின்றனர். சிறு குழந்தைகளுடன் வரும் இவர்களின் குழந்தைகள் பசியால் அழும் நேரத்தில் பாலுாட்டுவதற்கான மறைவான இடங்களை தேடி அலைகின்றனர்.தற்போது பெண்கள் சுரிதார் போன்ற உடைகளை பயன்படுத்துவதால் திறந்த வெளியில் குழந்தைகளுக்கு பாலுாட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் இங்கு பாலுாட்டும் அறை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.