உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டல தடகளப் போட்டிகள்

மண்டல தடகளப் போட்டிகள்

கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மார்ச் 6, 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 16க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.முன்னாள் தடகள வீரர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு உள்ள தினேஷ் குமார் போட்டியை துவக்கி வைத்தனர். முதல்வர் சேக் தாவூது முன்னிலை வகித்தார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மருதாச்சல மூர்த்தி, செந்தில் முருகன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி