தீ விபத்தில் எரிந்து 10 மரங்கள் சேதம்
தொண்டி: தொண்டி அருகே பரப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர் அலி 67. இவருக்கு சொந்தமான தென்னை மற்றும் பனைமரத் தோப்பு உள்ளது. நேற்று தோப்பில் இருந்து குப்பையை குவித்து தீ வைக்கப்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் மரங்களுக்கு பரவியது.இதில் 10 மரங்கள் சேதமடைந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.