உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  குரூப்-1   தேர்வில் 1106 பேர் ஆப்சென்ட்  

 குரூப்-1   தேர்வில் 1106 பேர் ஆப்சென்ட்  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வில் 3199 பேர் தேர்வு எழுதினர். 1106 பேர் தேர்வு எழுத வரவில்லை.மாவட்டத்தில் குரூப் -1 முதல்நிலை தேர்விற்கு 4305 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு 15 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 17 தேர்வு அறைகளில் நடந்தது. இதில் 4305 பேரில் 3199 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1106 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வினை கண்காணிக்க 4 நடமாடும் குழுக்களும், 17 ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மையத்திலும் எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன, தேர்வு மையங்களை கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை