மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு சூரியநல்லுார் மக்கள் மனு
10-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நல் லிருக்கையில் கோயில் திருவிழா பிரச்னையில் 12 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளதாக முன்னாள் தலைவர் பாக்கியம் தலைமையில் பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நல்லிருக்கையில் ஒரே சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசிக்கிறோம். அனைவரும் வழிபடும் குருக்கார் உடையார் அய்யனார் கோயில், ஓனாய் பொட்டல் முனியப்ப சுவாமி, பிரியாதி அம்மன் கோயில் உள்ளது. வரிவசூல் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு வரவு செலவு கணக்கு குறித்து தற் போதைய நிர்வாகத் தினரிடம் கோயில் முன்னாள் தலைவர் பாக்கியம் தரப்பினர் கேள்வி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. உத்தர கோசமங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அதன் பிறகு ஊரில் உள்ள மற்றவர்கள் எங்களுடன் எந்தவித உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என 12 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர் என கூறி யிருக்கின்றனர். முன்னாள் தலைவர் பாக்கியம், பழனிசெல்வி கூறியதாவது: தற்போது கோயில் திருவிழா முளைகட்டு துவங்க உள்ளது. எங்களை சுவாமி கும்பிட அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தை களுடன் சக குழந்தைகளை பேசக்கூடாது எனவும் கூறுகின்றனர். திருவிழாவிற்கு செல்ல முடியாமல் பெண்கள், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர் என்றனர்.
10-Oct-2025