மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
16-Nov-2024
மது பாட்டில் விற்றவர் கைது
13-Nov-2024
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நவ.,ல் கள்ளத்தனமாக மது விற்றவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புனித நகரான ராமேஸ்வரத்தில் மது விற்க தடை விதிக்கப்பட்டு டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. ஆனால் 11 கி.,மீ.,ல் பாம்பனில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து 200க்கும் மேற்பட்டோர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதல் விலைக்கு ராமேஸ்வரத்தில் தெருவெங்கும் தடையின்றி விற்றனர்.இதனால் புனித நகர் போதை நகராக மாறுவதால் பலரும் மதுபோதைக்கு அடிமையாகி வீதியில் கிடந்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பட்டுராஜா பணியில் சேர்ந்த 20 நாட்களில் துறைமுகம் வீதி, மாரியம்மன் கோயில் கடற்கரை, கரையூர், வேர்க்கோடு, மாந்தோப்பு ஆகிய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கள்ளத்தனமாக மது விற்றவர்களை எச்சரித்து விரட்டினார்.மேலும் கடந்த 20 நாட்களில் ஒரு பெண் உட்பட 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். போலீசாரின் அதிரடியால் இப்பகுதியில் ஓரளவுக்கு கள்ளத்தனமான மது விற்பனை குறைந்துள்ளது. துறைமுகம் போலீசார் நடவடிக்கை போல் மற்ற ஸ்டேஷன் போலீசாரும் தடுத்ததால் மீண்டும் புனித நகரின் களங்கத்தை அகற்றி, சமூக பாதுகாப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
16-Nov-2024
13-Nov-2024