மேலும் செய்திகள்
பனை மரத்திற்கு தீ
09-Aug-2025
பெரியபட்டினம்:முத்துப்பேட்டை கடற்கரை பகுதியை ஒட்டிய தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் 1,500 தென்னை, பனை மரங்கள் கருகின. ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் சர்ச் சாலையில் தென்னை, பனை மரங்களுடன் கோவில் தோப்பு உள்ளது. நேற்று மதியம், 12:30 மணிக்கு இங்கு திடீரென தீப்பற்றியது. தென்னை மரங்களையும் அதை ஒட்டி வளர்ந்திருந்த பனை மரங்களிலும் தீப்பற்றி 50 அடி உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. ஏர்வாடி, ராமநாதபுரம், வழுதுார் ஓ.என்.ஜி.சி., தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காற்றின் வேகத்தால் சேதுநகர், முத்துப்பேட்டை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவியது. இந்த தீ விபத்தில், 500 தென்னை மரங்கள், 1,000 பனை மரங்கள் தீயில் எரிந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Aug-2025