உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை முயற்சிக்கு 18 மாதம் சிறை

கொலை முயற்சிக்கு 18 மாதம் சிறை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தேரிருவேலி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் 2023ல் கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜ தொண்டீஸ்வரனுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரசெல்வம் 42. இவர் 2023ம் ஆண்டு ஊர்க்காவலன் கோயிலுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் பறித்து வைக்கப்பட்டிருந்த மிளகாய் மூடையை துாக்க சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜதொண்டீஸ்வரன் 34, அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். தேரிருவேலி கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை முதுகுளத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ராஜ்குமார் கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜதொண்டீஸ்வரனுக்கு 18 மாதம் சிறை தண்டனையும், ரூ.100 அபராதம் விதித்து உத்தரவிட்டார். தேரிருவேலி போலீசார் ராஜதொண்டீஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை