உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 18 ஆரம்ப சுகாதார  நிலையங்களுக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று 

18 ஆரம்ப சுகாதார  நிலையங்களுக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய தர சான்று பெறுவதற்கு 18 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் மாநிலங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், டாக்டர்களின் அறிவுத்திறன், டாக்டர்கள் நோயாளிகளை அணுகும் முறை, பணித்திறன், உணவு, பாராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் ரெகுநாதபுரம், தொண்டி, திருப்பாலைக்குடி, சோழந்துார், தங்கச்சிமடம், பாம்பன், புதுவலசை, உச்சிப்புளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் உள்ள சாயல்குடி, பார்த்திபனுார், மேலராமநதி, வெங்கட்டன்குறிச்சி, எமனேஸ்வரம், போகலுார், வாலிநோக்கம், நரிப்பையூர், கோவிலாங்குளம், திருவரங்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசு சார்பில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இருவர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தனர்.18 ஆரம்பசுகாதார நிலையங்கள் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றமையால் தேசிய தரச்சான்று பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும். இதன் மூலம் மேலும் ஆரம்ப சுகாதாரநிலையங்களின் தரம் மேம்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி