மேலும் செய்திகள்
கிடாய் வெட்டு விழா
27-May-2025
திருவாடானை : சர்ச் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை பாலியல் தொல்லை செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏந்தக்கரையில் அந்தோணியார் சர்ச் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.அதிகாலை 1:00 மணிக்கு 13 வயது சிறுமிகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் பரஞ்சோதிவாசல் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் 54, அங்கு இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் அமல்ராஜை கைது செய்தனர்.
27-May-2025