உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 2 சகோதரிகளுக்கு 3 ஆண்டு சிறை மேலும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய 2 சகோதரிகளுக்கு 3 ஆண்டு சிறை மேலும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே நரிப்பையூரைச் சேர்ந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய அக்கா, தங்கைக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, குருவையா என்பவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சாயல்குடி அருகேவுள்ள நரிப்பையூரைச் சேர்ந்தவர் சுந்தர கணபதி 38. இவரது மனைவி பூங்கொடி 32. பூங்கொடிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருவையாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த குருவையா சகோதரிகள் வெள்ளையம்மாள் 70, மாரியம்மாள் 60, ஆகியோர் அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த பூங்கொடி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுந்தர கணபதி புகாரின்படி சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குருவையா, வெள்ளையம்மாள், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.பூங்கொடியின் 8 வயது மகன் தாயை வெள்ளையம்மாள், மாரியம்மாள் அவதூறாக பேசியதால் தற்கொலை செய்ததாக சாட்சியம் அளித்தார். நீதிபதி கவிதா, தற்கொலைக்கு தூண்டியதாக குருவையாவிற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதமும், வெள்ளையம்மாள், மாரியம்மாளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை