தடையை மீறி கடலுக்கு சென்றதால் மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல்
தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களின் 20 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நலதிட்ட உதவிகளை ரத்து செய்யவும் என மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நவ.24 முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறையினர் எச்சரித்தனர். ஆனால் தடையை மீறி நேற்று பாசிபட்டினம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும் திரும்பி விட்டனர். தடையை மீறி சென்ற மீனவர்களின் 20 படகுகளை நேற்று பறிமுதல் செய்தனர். தடையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.