மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
24-Sep-2024
10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
14-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரூ.48 கோடியில் கட்டப்பட்டு வரும் காவனுார் மேம்பாலப் பணிகளில் பாதிப்பை தடுக்கும் வகையில் 20 ஆயிரம் மணல் மூடைகள் கரைப்பகுதியில் அடுக்கும் பணி நடக்கிறது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்., நவ., மாதங்களில் அதிகளவில் பெய்கிறது. இக்காலத்தில் மழை நீருடன், வைகை ஆற்று நீரும் அதிகம் வருவதால் ராமநாதபுரம் - நயினார்கோவில் தொருவளூர், காவனுார் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கி மேல்மட்டம் வரை தண்ணீர் செல்லும் போது நயினார்கோவில் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.48 கோடியில் காவனுார், தொருவளூர் பகுதியில் இரு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மழைக்காலத்தை முன்னிட்டு சாலையின் இருபுறமும் 20 ஆயிரம் மணல் மூடைகள் பாலப்பணியை பாதிக்காத வகையில் கரைகளில் அடுக்கும் பணி ராமநாதபுரம் கோட்டப்பொறியாளர் முருகன் மேற்பார்வையில் நடக்கிறது.இதன் மூலம் வைகை நீர் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி செல்வதற்கும், மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.
24-Sep-2024
14-Oct-2024