மேலும் செய்திகள்
108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
22-Jan-2025
ராமநாதபுரம்:-இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பந்தய புறாக்கள், ஆப்ரிக்க காதல் பறவைகள், பறக்கும் அணில்களை லாரியுடன் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.இந்தியாவில் இருந்து பறவையினங்கள், விலங்குகள் இலங்கைக்கு கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்நாட்டு கடற்படையினரும் மன்னார் போலீசாரும் இணைந்து, பேசாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான லாரியை சோதனையிட்டதில், 220 பந்தய புறாக்கள், 20 ஆப்ரிக்க காதல் பறவைகள், 8 பறக்கும் அணில்கள் மற்றும் மருந்துகள், மருத்துவ திரவங்கள் அடங்கிய பைகளை பறிமுதல் செய்தனர்.இந்த கடத்தலில் ஈடுபட்ட தம்புள்ளை, கொழும்புவைச் சேர்ந்த, மூன்று பேரை கைது செய்தனர். இவர்களை மன்னார் போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இந்தியாவில் இருந்து படகில் இவற்றை கடத்தி வந்தது தெரிந்தது. மேல் விசாரணை நடக்கிறது. 104 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக அந்நாட்டு கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். கடலில் இரு படகுகளில் கடத்தி வரப்பட்ட, 104 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 24, 25, 27 வயதுடைய மூன்று பேரை கைது செய்தனர். கஞ்சாவின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.
22-Jan-2025