கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் முத்துக்குமார் கொலையில் கூலிப்படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.பரமக்குடி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் 29. சரவணன் 29. நவ.1ல் நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் சரவணன் உட்பட ஆறு பேர் கும்பல் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சுசீலாவையும் வெட்டினர்.போலீசார் சரவணன் மற்றும் திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்த டிரைவர் கெய்வின்ராஜ் 19, ஆகியோரை கைது செய்தனர். 'தனது அக்காளுடன் கள்ளத்தொடர்பு வைத்து அவரின் வாழ்க்கையை அழித்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்தேன்,' என சரவணன் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கூலிப்படையை சேர்ந்த சிவகங்கை மாவட்டம் உருளியை சேர்ந்த முத்துராஜா 20, திருவாடானை சூச்சனி பாலகிருஷ்ணன் 19, கடம்பாகுடி சொக்கு 19, ஆகிய மூவரையும் நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.