மேலும் செய்திகள்
ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்
21-Aug-2025
திருவாடானை : திருவாடானை அருகே கொத்தடிமைகளாக ஆடு மேய்த்த சிறுவன் உட்பட 3 பேரை வருவாய்த்துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பெத்தநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா 56. இவருடைய மனைவி சீரங்கி 55. இவர்களுடைய ஐந்து வயது பேரன். இவர்கள் மூன்று பேரும் திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக ஐந்து மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்தனர். கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து டி.நாகனி குரூப் வி.ஏ.ஓ., சண்முகம், ஓரிக்கோட்டை வி.ஏ.ஓ., மகாலிங்கம் சென்று மூவரையும் மீட்டு அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்த னர்.
21-Aug-2025