பட்டாசு வெடித்ததில் 3 டூவீலர்கள் எரிந்தன
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்து சிதறியதில் ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த 3 டூவீலர்கள் எரிந்தன. நேற்று தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதியில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். அப்போது சில பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த மெக்கானிக் ஷாப் முன்பு நிறுத்தி இருந்த டூவீலர்கள் மீது விழுந்தது.இதில் தீப்பிடித்து 3 டூவீலர்கள் மளமளவென எரிந்தன. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வரதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர். இந்த தீ விபத்தில் 3 டூவீலர்கள் முழுமையாக எரிந்தன. துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.