3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆர்.எஸ்.மங்கலம்,:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பாலைக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்.எஸ்.மங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் ஹேமாவதிக்கு தகவல் கிடைத்தது. திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியில் சென்ற வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது.வாகனத்தை நிறுத்திய போது டிரைவர் உட்பட அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். வாகனத்தில் 60 மூடைகளில் தலா 50 கிலோ வீதம் இருந்த 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூடைகளை திருவாடானை வட்ட செயல்முறை கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் ஒப்படைத்தனர்.திருப்பாலைக்குடி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி காரைக்குடி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.