உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 322 மனு: மாணவர்களுக்கு பாராட்டு

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 322 மனு: மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 322 மனுக்கள் பெறப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 322 மனுக்களை பெற்று அவற்றை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் மீன்வளத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்கள் 'கேபிள் கிளைடு வே' என்ற புதிய தொழில்நுட்ப கல்வியான ரோபோ கண்டுபிடித்துள்ளனர். இதற்காக ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பார்வையற்ற ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யாருடைய உதவியுமின்றி செல்வதற்கான ஜி.பி.ஆர்.எஸ்., கருவி கண்டுபிடித்தமைக்கு மாநில அளவில் மூன்றாம் இடம் கிடைத்தது. இதற்காக ரூ.10 ஆயிரம் பரிசு, பாராட்டுச்சான்றிழ் வழங்கப்பட்டது.மேலும் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நுண்ணுயிரிகளை எளிதாக கண்டுபிடிக்கும் நுண்ணோக்கி உபகரணம் கண்டுபிடிப்பிற்காக ர.10 ஆயிரம் பரிசு, பாராட்டுச்சான்றுகளை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை