சபரிமலைக்கு 33வது ஆண்டு பாதயாத்திரை
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் இருந்து சபரிமலைக்கு 89 வயதான குருசாமி சேஷய்யன் தலைமையில் 33வது ஆண்டு பாதயாத்திரையை நேற்று துவக்கினர்.எமனேஸ்வரம் ஸ்ரீ தர்மசாஸ்தா சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் நேற்று மதியம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து இருமுடி கட்டப்பட்டது. குருசாமிகள் சேஷய்யன், மோகன், நாகராஜன் தலைமையில் 30 பேர் புறப்பட்டனர்.இவர்கள் 17 நாட்கள் நடைபயணமாக பரமக்குடி, அருப்புக்கோட்டை, இருக்கங்குடி, சங்கரன்கோவில், அச்சன் கோயில், எருமேலி வழியாக சபரிமலை அடைவர். தொடர்ந்து 89 வயதில் உள்ள குருசாமியிடம் பலரும் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.