உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருடிய 4 பேர் கைது

பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருடிய 4 பேர் கைது

தொண்டி : தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஜூன் 14 அதிகாலை 3:00 மணிக்கு டூவீலரில் இருவர் பெட்ரோல் போட சென்றனர். அப்போது டூவீலரை ஓட்டி வந்தவர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்திருந்தவர் பெட்ரோல் பங்கில் உள்ளே சென்று பணப்பெட்டியில் ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவத்தை திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து தொண்டி போலீசார் தேவிபட்டினம் மூட்டைகார தெருவை சேர்ந்த செய்யதுஇப்ராகிம் 21, ஹசன்அலி 18 ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்த போது இருவரும் திருவாடானை, தொண்டி, புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் பகுதிகளில் டூவீலர்கள் திருடியதும் தெரியவந்தது. டூவீலர்களை தேவிபட்டினம் ராஜேந்திரன் 55, பாண்டியன் 62, ஆகியோரிடம் விற்றனர். போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை