உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓராண்டில் 44 ராமேஸ்வரம் படகுகள் சிறைபிடிப்பு : ரூ.12.40 கோடி இழப்பு

ஓராண்டில் 44 ராமேஸ்வரம் படகுகள் சிறைபிடிப்பு : ரூ.12.40 கோடி இழப்பு

ராமேஸ்வரம்:ஓராண்டில் ராமேஸ்வரம் மீனவர்களின் 44 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்ததால் மீனவர்களுக்கு ரூ.12.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம் முதல் நாகை வரை உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இலங்கை கடற்படை வீரர்கள் படகுகளை சிறைபிடித்து இலங்கை யாழ்ப்பாணம் அருகே காரைநகர், மன்னார் கடற்கரையில் நிறுத்தி உள்ளனர். இதில் 2024 ஜூன் 15 முதல் 2025 ஏப்., 14 வரை மீனவர்களுக்கான ஓராண்டு மீன்பிடி காலத்தில் ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 40 விசைப்படகுகள் (தலா ரூ. 30 லட்சம் மதிப்பு), 4 நாட்டுப்படகுகளை (தலா ரூ.10 லட்சம் மதிப்பு) இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இப்படகுகள் பெரும்பாலும் அரசுடைமை ஆக்கப்பட்டு இலங்கை கடற்கரையில் சேதமடைந்து கிடக்கின்றன.இதனால் ரூ.12.40 கோடி இழப்பீடு ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கினாலும் போதுமானதாக இல்லை. பிரச்னைக்கு மத்திய அரசு சுமூக தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ