உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வண்ணாங்குண்டு டாஸ்மாக்கை உடைத்து திருடிய 5 பேர் கைது

வண்ணாங்குண்டு டாஸ்மாக்கை உடைத்து திருடிய 5 பேர் கைது

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு செல்லும் வழியில் மயானப்பகுதியை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையின் பணியாளர்கள் செப்., 21ல் கடையை மூடி சென்ற நிலையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்த சேகர் 54, திருப்புல்லாணி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சித்தார்கோட்டை அருகே வாழூரை சேர்ந்த அசோக்குமார் 42, ராமநாதபுரம் சேட்டு இப்ராஹிம் தெரு தங்கபாண்டியன் 31, இருவரும் நண்பர்கள். திருடிய மது பாட்டில்களை தினைக்குளம் அருகே நாடார் குடியிருப்பு உள்ள தோப்பு பகுதியில் புதைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கக்கூடிய திருப்புவனத்தை சேர்ந்த நிஷாந்தன் 23, காரியாபட்டி ஆலங்குளத்தைச் சேர்ந்த முனிராஜ் 22, முத்துப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜ் 19, ஆகியோர் உதவியுள்ளனர். சிசிசிடி கேமரா பதிவு அடிப்படையில் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !