நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமாரிப்புத்துறை சார்பில் கிராமங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக 10 பேருக்கு மானியம் வழங்க உள்ளனர். கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று ஜூன் 21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஆதார் நகல், கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு 4 வார 250 கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 625 வரை மானியம் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.