நெசவாளருக்கு 6 சதவீதம் கூலி உயர்வு
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் தனியார் நெசவாளர்களுக்கு 6 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடந்தது. மாஸ்டர் வீவர் சங்க அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் தனியாரிடம் நெய்யும் நெசவாளர்களுக்கு 6 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில் கைத்தறி சங்க போராட்ட குழு கன்வீனர் குப்புசாமி, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ரமேஷ்பாபு, லோகநாதன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., சுப்பிரமணியன், சசிகுமார், சி.ஐ.டி.யு., முரளி, ஐ.என்.டி.யு.சி., ராமச்சந்திரன், சீதாராமன், பி.எம்.எஸ்., காசி விஸ்வநாதன், ஜனதா தளம் ராம்தாஸ், பாஸ்கரன் மற்றும் மாஸ்டர் வீவர்கள் சங்க ரவி, மோகன், சாந்தாராம், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.