மேலும் செய்திகள்
300 கோழி, புறாக்கள் பறிமுதல்
12-Sep-2025
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை சென்ற 6 அகதிகளை அந்நாட்டு கடற்படை வீரர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இலங்கை மன்னார் சேர்ந்த தாஸ் நேவிஸ் 43, மனைவி ரஜினி 42, மகன் யோசுவா 15, மகள்கள் ஏஞ்சலின் 14, அன்சிகா 8, மற்றும் சிவனேஸ்வரன் 50, ஆகியோர் அகதியாக வந்து திருச்சி முகாமில் தங்கினர். 2021 விசா மூலம் இலங்கை திரும்பிச் சென்றனர். பின் அங்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதும் 2022 ஜூன் 17ல் படகு மூலம் தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் வசித்தனர். இந்நிலையில், மண்டபத்தில் வருவாய் இன்றி பரிதவித்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். ஆனால் அனுமதி கிடைக்காததால், நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றனர். இவர்களிடம் ரூ. 1 லட்சம் கூலி வாங்கிய மண்டபம் மீனவர்கள் தனுஷ்கோடியில் இருந்து 7ம் மணல் தீடையில் (இலங்கை எல்லை) இறக்கிவிட்டு திரும்பினர். பின் அங்கிருந்து இலங்கை படகோட்டிகள் இவர்களை ஏற்றிக் கொண்டு மன்னார் செல்லும்போது, அந்நாட்டு கடற்படையிடம் சிக்கினர். பின் இவர்களை மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் விசாரித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த அகதிகளை ஏற்றி சென்ற மண்டபம் மீனவர்கள் யார் என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Sep-2025