சிறுபான்மையினர் ஆணையம் போட்டியில் 6 மாணவர் வெற்றி
ராமநாதபுரம்; -சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய பேச்சு போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாநில, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சிறுபான்மையினர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் நடத்தினார். இதில் மாவட்ட அளவில் தமிழ் பிரிவில் காயத்திரி, நிலோபர், பூஜாஸ்ரீ ஆகியோரும், ஆங்கில பிரிவில் ஸ்ரீ விசாலினி, விசாலினி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்று சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று காசோலை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் பாராட்டினர்.