வீட்டில் பதுக்கப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; கைது 1
ராமநாதபுரம்: மநாதபுரம் மாவட்டம்கடலாடி அருகே புனவாசல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.ரேஷன் அரிசி புனவாசல் பகுதி வீடு ஒன்றில் பதுக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசார் அப்பகுதியிலிருந்த ஒரு வீட்டில் சோதனையிட்டனர். இதில் 14 மூடைகளில் 50 கிலோ வீதம் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கிய முனியசாமி மகன் திருமுருகன் 33, கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.--