உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடத்தல் வழக்குகளில் கைப்பற்றிய 747 கிலோ கஞ்சா அழிப்பு

கடத்தல் வழக்குகளில் கைப்பற்றிய 747 கிலோ கஞ்சா அழிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 2005 முதல் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 747 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.152 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 747 கிலோ கஞ்சா ராமநாதபுரம் ஆயுதப்படையில் உள்ள மல்கானாவில் வைக்கப்பட்டிருந்தது. அதை அழிப்பதற்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அனுமதி தரப்பட்டது.மே 17ல் கஞ்சா பார்சல்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள கஞ்சா அழிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி தலைமையில், எஸ்.பி.சந்தீஷ் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை