உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரத்தில் 750 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடலில் கடலோர காவல் படையினர் ரோந்துக் கப்பலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நாட்டுப்படகில் இருந்த இரு மீனவர்கள் இந்திய வீரர்களை பார்த்ததும் மண்டபம் கரை நோக்கி திரும்பினர். உடனே இந்திய வீரர்கள் அப்படகை விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போது அதில் இருந்த இருவரும் கடலில் குதித்து தப்பினர்.அப்படகை சோதனை செய்த போது மூடைகளில் 750 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. உயிருடன் இருந்த கடல் அட்டையை கடத்தல்காரர்கள் மறைவான இடத்தில் காயவைத்து மருத்துவ பயன்பாட்டிற்காக கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்த இருந்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கடத்தல்காரர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ