உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலையனேந்தலில் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தான பாலம்

வலையனேந்தலில் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தான பாலம்

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி அருகே வலையனேந்தலில் பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.கீழக்கரை செல்லும் வழியில் உள்ள வலையனேந்தல் அருகே கிராம சாலையின் 100 மீ., தொலைவிற்கு பாலம் உள்ளது.துாம்பு பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது.இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகனங்கள் ஒதுங்கும் பொழுது வேறு வழியின்றி கீழே விழும் விபத்து அபாயம் நிலவுகிறது. பாலத்தின் பகுதிகளிலும் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் விபத்தை தடுக்க இருபுறங்களிலும் தடுப்புச் சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை