உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் மீன் லாரி மோதி மின்கம்பம் முறிந்தது

இரவில் மீன் லாரி மோதி மின்கம்பம் முறிந்தது

தொண்டி: தொண்டியில் நள்ளிரவில் மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்தது. இரவோடு, இரவாக புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. தொண்டி பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு மீன் ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவோடு, இரவாக ஈடுபட்டனர். இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி கூறியதாவது: விபத்து நடந்த இடத்தில் லாரியை மீட்க நீண்ட நேரம் ஆனது. அதனை தொடர்ந்து லாரி உரிமையாளரிடம் இழப்பீடு தொகை பெறப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கும் பணி உடனே துவங்கி அதிகாலை 4:30 மணிக்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ