உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் கோலாகலம்

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் கோலாகலம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. ஜூலை 19ல் ராமேஸ் வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. 12ம் நாள் விழாவான நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரித்த மேடையில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க இரவு 7:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு திரு மாங்கல்யம் அணிவித்து ஆடித் திருக்கல்யாண விழாவை கோயில் குருக்கள் விமரிசையாக நடத்தினர். இதன்பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபா ராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்லதுரை, ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் நலச்சங்க தலைவர் ராமசுப்பிர மணியன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் சுப்பிரமணியன், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம், யாத்திரை பணியாளர் சங்கம் மற்றும் ஹிந்து அமைப்பினர் திருமாங்கல்ய பாக்கெட்டை பிரசாதமாக வழங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை