வீணாகி வரும் சுகாதார வளாகம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது பராமரிப்பு செய்யப்படாததால் பயன்பாடின்றி சீமைக் கருவேலம் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பிறகு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் தற்போது பயன்பாடின்றி சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதன் அருகில் கிராம மக்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியும் வீணாகி வருகிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே சுகாதார வளாகம் மற்றும் குளியல் தொட்டியை மக்கள் பயன்படுத்துவதற்காக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.