உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பள்ளியில் குழந்தைகளை  சேர்க்க வலியுறுத்தி ஊர்வலம்

அரசுப்பள்ளியில் குழந்தைகளை  சேர்க்க வலியுறுத்தி ஊர்வலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி இயக்குநர் சாத்தையா தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி வரவேற்றார். அரசுப்பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் சேர்த்து அரசால் கிடைக்கக்கூடிய நலத்திட்டங்களை பெறுவது குறித்தும், அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்ப்பதன் அவசியம் குறித்தும் குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது.பின் திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாப் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கல்வியாளர்கள் உஷா, சேதுபதி, ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி பணியாளர்கள் பாக்கியலட்சுமி, காமாட்சி, பிரியா ஆகியோர் பங்கேற்றனர். ராஜாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ