உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதையில் சிக்கி தடம் மாறும் கிராமத்து இளைஞர்களை மீட்பதற்கு கோரிக்கை

போதையில் சிக்கி தடம் மாறும் கிராமத்து இளைஞர்களை மீட்பதற்கு கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் போதைப் பொருள்களின் பாதிப்பால் தடம் மாறும் இளைஞர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் மற்றும் நல்வழிப்படுத்தும் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையை சுற்றியுள்ள கரையோர கிராமங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் போதைப் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மது, கஞ்சா, போதை ஊசி பழக்கத்தில் சிக்கும் இளைஞர்களால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் நிலவுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: கிராமங்களில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தமிழக அரசு சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதையால் விளையும் தீங்கு குறித்த விளக்க படத்தை இப்பகுதியில் குறு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஏற்படுத்த வேண்டும்.போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் போதையால் தடம் மாறும் இளைஞர்களை கண்டறிய வேண்டும். கீழக்கரை நகர் பகுதியில் சட்ட விரோதமாக விற்கப்படும் மதுபான விற்பனையை உரிய முறையில் தடுக்க வேண்டும்.எனவே மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு தாலுகாக்களிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் இது போன்ற மது போதையால் பாதிப்பு மற்றும் வழி தவறும் இளைஞர்களை நல்வழிப்படுத்தலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !